தேர்தல் காலங்களில் மட்டும் பயன்படுத்தும் சக்தியாக இளைஞர்கள் இருக்கக் கூடாது: இம்ரான் MP

0
91

unnamed (4)கடந்த தேர்தல் காலங்களில் இடம்பெற்றது போன்று இளைஞர்கள் போஷ்டர் ஒட்டுவதற்கும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்த படக் கூடாது. மாறாக மாற்றத்தை நோக்கிய பயணத்தில் அவர்களின் புத்தாக்க சிந்தனை பயன்படுத்தப்பட வேண்டும் என் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.

சனிக்கிழமை கிண்ணியா நூலக மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் வலுவூட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது மாவட்டத்தில் உள்ள துடிப்புமிக்க இளைஞசர்களின் ஒருபகுதியினருக்கு மத்தியில் உரையாடக்கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் எமது நாட்டை இயற்கை வளம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக குறிப்பிடுவார்கள். ஆனால் எம்மிடம் உள்ள அனைத்துவளங்களிலும் சிறந்தது மனித வளமே செயல்திறன் கூடிய இளைஞசர் வளமொன்று எமது சமூகத்தில் உள்ளது இதைக்கொண்டு நாம் பிரயோசனமடைகினறோமா என கேட்டால் இல்லை என்றே கூறமுடியும்.

தற்போதுள்ள இளைஞசர்களிடத்தில் தூரநோக்குடன் கூடிய செயல்பாடுகளை காண்பது அரிதாகவே உள்ளது அரசாங்க வேலையை எதிர்பார்த்து சமூகவளைதலங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் இளைஞசர்களையே இப்போது காணமுடிகிறது. சமூக தளங்களில் மட்டும் எமது சமூக அக்கறையை நிறுத்திகொள்ளாமல் வெளிப்படையாகவும் உங்கள் சமூக அக்கறையை காட்டவேண்டும் இளைஞசர்களும் அரசியலுக்கு வரவேண்டும் அதையே ஐக்கியதேசிய கட்சி விரும்புகிறது அதற்காகவே இந்த வலுவூட்டல் நிகழ்வை நாடுமுழுவதும் ஏற்பாடுசெய்துள்ளோம்.

தற்கால இளைஞ்சர்களின் முக்கிய பிரட்சனை வேலைவாய்பின்மையே இப்பிரட்சினைகள் அனைத்துக்கும் முற்றுமுழுதாக அரசாங்கத்தை குற்றம்சாட்டுவதோ அரசாங்கத்திடம் தீர்வுகளை எதிர்பார்பதோ தவறு முதலில் இப்பிரட்சினைகளுக்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து அதை தீர்பதற்கான வழிமுறையை ஆராய வேண்டும்.

தற்போது எமது நாட்டிலுள்ள இளைஞசர்கள் எதிர்நோக்கும் பிரட்சினைகளுக்கான அடிப்படை காரணம் இந்நாட்டிலுள்ள கல்விமுறையாகும். பதினொரு வருடங்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கவிகற்ற மாணவர்கள் சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாவிட்டால் அவர்களின் பதினொரு வருட கஷ்டங்களுக்கும் பலனில்லாமல் போகிறது அவர்களின் எதிர்காலத்தை அத்துடன் இக்கல்வி முறை இருள்மயமாக்குகிறது.

இதேநிலையே உயர்தர பரீட்சியில் சித்தியடைந்து பல்கலைகழகங்களுக்கு அனுமதிபெற தவறுபவர்களுக்கும் இத்தடைகளை தாண்டி பல்கலைகழகங்களுக்கு அனுமதிபெறும் மாணவர்களுக்காவது சிறந்த எதிர்காலம் உண்டா என பார்த்தல் அவர்களுக்கும் வேலையில்லா பிரட்சினை இதனால் எமது மனித வளங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து டொலர்களையும் ரியால்களையும் இறக்குமதிசெய்யும் அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

ஆகவே எமது கல்விமுறையில் மாற்றம் கொண்டுவந்து பரீட்சையில் சித்தியடைய தவறும் மாணவர்களுக்கான புதிய செயல்திட்டங்களை அமுலாக்குவதன் மூலம் நீங்கள் கூறிய பெரும்பான்மையான பிரட்சினைகளுக்கு தீர்வுகண்டு வேலையில்லா பிரட்சனையை முடிவுக்கு கொண்டுவரலாம். நான் ஒரு இளைஞன் என்ற வகையில் அவர்களின் உணர்வுகளை மதிக்கக் கூடியவன். இன்று எல்லா சந்தர்ப்பங்களிலும் இளைஞர்களுக்கான புறக்கணிப்புக்கள் இடம்பெறுகின்ற அவ்வாறான சந்தர்ப்பங்களில் என்றும் எனது குரல் இளைஞர்களுக்காக ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இளைஞர்களை ஒன்றுபடுத்தி அவர்களின் வளம்மிக்க வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். புதிய ஆட்சியில் என்னென்ன விடையங்களை மேற்கொள்ள முடியுமோ அத்தனை விடையங்களையும் நான் பெற்றுத்தருவேன். எமது தனித்துவத்தை பேணுகின்ற ஆட்சியை நாம் ஏற்படுத்த வேண்டும் எதிர் வரும் காலங்கள் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆண்டாக அமையும் என நான் எதிர் பார்க்கின்றேன். ஐக்கிய தேசிய கட்சியில் தொடர்ந்து இணைந்துருக்கின்ற உமது வாழ்வில் விடிவு பிறக்கும் எனவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY