கிண்ணியாவில் தபால்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இம்ரான் எம்.பி கோரிக்கை

0
92

unnamed (3)கிண்ணியா குறிஞ்சாக்கேணி தபால் அலுவலகங்களிலும் மகருகிராமம் உப தபால் அலுவலகத்திலும் தற்போது பணியாற்றுகின்ற தபால்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தபால் தபால்சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிண்ணியா அஞ்சல் அலுவலக நிர்வாகத்தின் கீழ் 57 கிராமங்களைச் சேர்ந்த 43,702 பொதுமக்கள் வருகின்றனர். இந்த அஞ்சல் அலுவலகம் 42 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட பகுதிக்கு தபால் விநியோகம் செய்கின்றது. இங்கு தற்போது 5 தபால்காரர்கள் மட்டும் கடமை புரிகின்றனர். இவர்களால் உரிய வேளைக்குள் கடிதங்களை விநியோகிப்பதில் சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டு வருகின்றது. எனவே இங்கு தபால் காரர்களின் எண்pக்கையை 8 ஆக அதிகரிக்க வேண்டும்.

குறிஞ்சாக்கேணி தபால் நிலையம் மகருகிராமம் தபால் நிலையம் ஆகியவற்றின் கீழ் தற்போது ஒவ்வொரு தபால்காரர்கள் மட்டுமே கடமை புரகின்றனர். இவர்கள் அதிக மக்களையும் பெரிய நிலப் பரப்பளவையும் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளதால் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பொதுமக்களால் உரிய நேரத்திற்கு தபால்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே தலா 2 தபால்காரர்களை இங்கு அதிகரிக்க வேண்டும். பொதுமக்களின் நன்மை கருதி இந்த விடயத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு அந்தக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY