பின் தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையின் அபிவிருத்தியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தும்: கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்

0
161

-சப்னி அஹமட்-

unnamed (1)பின் தங்கிய பிரதேசங்களின் வைத்தியத்துறையின் அபிவிருத்தியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிக கவனம் செலுத்தும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் நேற்று (21) தெரிவித்தார். வாங்காமம் ஆரம்ப வைத்திய பிரினை திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களினால் அதிக விருப்பத்திற்குரிய ஓர் பிரதேசமான வாங்காமம் பிரதேசம் இருந்தன. இந்த பிரதேசத்தின் மக்கள் தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் நோய்களை குணப்படுத்தப்படவேண்டிய விடயங்களிலும் இந்த மக்கள் கஷ்ட நிலைமைக்கு ஆளாகி இருந்தனர்.

கடந்த காலங்களில் இந்த வாங்காமம் பிரதேசத்திற்கான ஓர் நிரந்த வைத்திய சேவையை வழங்கக்கூடிய வகையில் வைத்தியசாலைகள் இல்லாமல் இருந்தது இதனை அடுத்து இந்த நல்லாட்சிஅரசின் மூலம் இவ்வைத்தியசாலையை மேம்படுத்தி இந்த பிரதேசத்து மக்களுக்கு வைத்தியசாலையை வழங்க முன்வந்து இதனை இன்று திறந்து வைக்கின்றோம்.

அது மாத்திரம் இன்றி குறித்த ஆரம்ப பராமரிப்பு வைத்தியசாலையினை நிரந்திர கட்டிடத்தில் ஓர் வைத்தியசாலையாக அமைக்கவும் நான் இங்கு சுகாதார அதிகாரிகளிடம் கூறுகிறேன் என்பதுடன் 2017இல் நிரந்தரக்கட்டிடத்தில் வைத்தியசாலையும் நிரந்திர வைத்தியரும் நியமித்து இந்த பிரதேச மக்களின் எதிர்கால சுகாதார நடவடிக்கைகளில் நாம் அதிக அக்கறை செலுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

மேலும், குறித்த பிரதேச மக்கள் இந்த வைத்தியசாலை இன்மையால் இறக்காமம், அம்பாறை போன பிரதேச வைத்தியசாலைகளுக்கே சென்றனர். இதனை கருத்திற்கொண்டே இந்த ஆரம்ப வைத்தியசாலையை நிருவியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் மாகாண சபை உறுப்பினர்களான மாஹீர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்

LEAVE A REPLY