முஸ்லிம் சமூகம் புதியதொரு அரசியல் தலைமை பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளது: எம்.எஸ் சுபையிர்

0
201

(எம்.ஜே.எம். சஜீத்)

fff (5)எமது நாட்டின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அண்மைக்காலமாக சில பிரச்சிணைகளுக்குள் சிக்குண்டு பல சவால்களையும், இன்னல்களையும் எதிர்கொண்டு சிக்கித்தவிப்பதனால் முஸ்லிம் சமூகம் புதியதொரு அரசியல் தலைமை பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேசத்தில் 500 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்கான காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு முன்தினம் (21) ஏறாவூர் பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“இன்று கிழக்கு மாகாணத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைக்கு எதிராக கிழக்கின் எழுச்சி என்கின்ற போர்வையில் கிழக்கில் தலமைத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று பாரியதொரு எதிர்பார்ப்பும் அதே போன்று வடக்கிலுள்ள தலைமைத்துவம் இந்த நல்லாட்சியிலே ஊழல் விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ள படியாலும் முஸ்லிம் சமூகத்திற்கான புதிய அரசியல் தலைமைத்துவம் பற்றி எமது சமூகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறது.

இவ்வாறான எமது அரசியல் தலைமைகளின் சிக்கல்களை நாளாந்தம் ஊடகங்கள் வாயிலாக எமது சமூகம் அறிந்த வன்னமுள்ளது. ஆகையால் புதியதொரு தலைமைத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்கின்ற எதிர்பார்ப்பும் தற்போது காணப்படுகிறது. அந்த அடிப்படையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய தகைமையும் அனுபவமும் அமைச்சர் ஹிஸ்புல்லாவிடமே காணப்படுகிறது.

குறிப்பாக அரசியல் அனுபவம், எமது சமூகம் பற்றிய சிந்தனை, அபிவிருத்தி அரசியல், வெளிநாட்டு இராஜதந்திர உறவுகள் என்பன் இதற்கு சான்றுகளாகவுள்ளன. அதனாலேதான் முஸ்லிம் சமூகம் புதிய அரசியல் தலைமைத்துவமாக அமைச்சர் ஹிஸ்புல்லாவை இனங்கன்டிருப்பதாக அறியமுடிகிறது.

கடந்த தேர்தல் காலங்களில் அமைச்சர் ஹிஸ்புல்லா வழங்கிய வாக்கறுதிகளுக்கமைவாக அவர் தன்னுடைய பணிகளை இந்த மண்ணுக்கு நிறைந்த மனதோடு செய்துவருவதனை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக இந்த மண்ணிலே வீட்டுத்திட்டங்கள், பள்ளிவாசல்கள் நிர்மானம், குடிநீர் திட்டங்கள், வாழ்வாதார வசதிகள், கல்வி அபிவிருத்தி திட்டங்கள் என்பவற்றை இந்த மக்களுக்காக செய்துகொடுப்பதிலே மிகவும் ஆர்வமாக செயற்பட்டு வருகிறார். அதில் ஒரு பணிதான் இன்று 500 பேருக்கு குடி நீர் வழங்கும் நிகழ்வாகும்.

fff (2)குறிப்பாக தேர்தல் காலங்கள் வருகின்ற போது சொந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென நீங்கள் பேசுவது வழக்கம் தேர்தல் முடிந்ததும் வெளியூர் அரசியல்வாதிகள் வந்து இந்த ஊரிலே அபிவிருத்தி செய்யும் நிலையே காணப்படுகிறது. இந்த ஊரில் அதிகமான அபிவிருத்தித்திட்டங்களை வெளியூர் அரசியல் வாதிகளினாலே செய்யப்பட்டிருப்பதனை ஏறாவூர் சமூகம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அதனாலேதான் நான் வெளியூர் அரசியல் தலைமைகளோடு இணைந்து எனது அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகின்றேன். அப்போதுதான் ஏறாவூர் பிரதேசத்திலும் பெரும்பாலான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகிய ஹாபீஸ் நசீர் அகமட் கடந்ததேர்தல் காலங்களின்போது பணங்களையும், அன்பளிப்பு என்ற போர்வையில் கப்பங்களையும் வழங்கி எமது மக்களின் வாக்குகளை எவ்வாறு சுவீகரித்தக் கொண்டாரோ அதே போன்றுதான் எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்காகவும் கப்பங்களை வழங்கி வாக்குகளை சுவீகரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.ஆகவே பணத்துக்காக வாக்களித்து ஏறாவூர் மக்கள் இந்த மண்ணுக்கு மீண்டும் துரோகம் செய்துவிடாதீர்கள்.

குறிப்பாக முதலமை்ச்சர் அவர்கள் இரண்டு வருடங்கள் மாகாண சபையிலே அமைச்சராகவிருந்த போது வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வந்து கிழக்கில் முதலீடு செய்யப் போகின்றேன் எனக்கூறி கொழும்பிலே பாரிய மாநாடுகளை நடத்தினார் இறுதியில் எந்தவொரு முதலீட்டாளர்களும் கிழக்கிற்கு வரவில்லை கடைசியில் அந்த அமைச்சின் பணங்களே வீன்விரயமாக்கப்பட்டது இதனை யாரும் மறந்துவிட முடியாது.

இப்போது முதலமைச்சராகவிருக்கும் அவர் மீண்டும் முதலீட்டாளர்களை கிழக்கிற்கு அழைத்துவருவது தொடர்பில் தொடர் மாநாடுகளை நடாத்தி வருகிறார். இதுவரை எந்தவொரு முதலீட்டாளர்களும் கிழக்கில் முதலீடு செய்வதற்காக வந்ததாகத் தெரியவில்லை கடைசியில் மாகாணத்தினுடைய கோடிக்கணக்கான பணங்களே வீன்விரயமாக்கப்பட்டது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY