நூலகமொன்று உருவாக்கம் பெறுகின்றதொன்றால் அந்த பிரதேசத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்ட தினமாக அதனை நான் கருதுகின்றேன்: மாஹிர்

0
152

(எம்.எம்.ஜபீர்)

Mahirஎந்தவொரு பிரதேசத்தில் நூலகமொன்று உருவாக்கம் பெறுகின்றதொன்றால் அந்த பிரதேசத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்ட தினமாக அதனை நான் கருதுகின்றேன்.
இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் சம்மாந்துறை புளக் ஜே மேற்கு கைகாட்டி பிரதேசத்தில் அல்-ஹிலால் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூலக திறப்பு விழாவில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

அல்-ஹிலால் சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.மக்கீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.சலீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ. காதர், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வித்தியாலய அதிபர் ஐ.எல்.எம்.சலீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் வை.வீ.சலீம், சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.வாஹிட், இளைஞர்கள், பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், குறிப்பாக அரசியல் வாதிகள் காலத்திற்கு காலம் மக்கள் மத்தியில் வந்து மக்களை ஏமாற்றி செல்லுகின்றனர். இதற்கான காரணம் மக்களின் அறியாமையே. இன்றைய காலகட்டத்தில் மக்கள் நாட்டில் மற்றும் உலகில் நடப்பவற்றை அறிந்து கொள்வதற்காகத்தான் இந்த வாசிகசாலையை திறந்து தந்துள்ளோம். இதனை இளைஞர்கள் முறையாக பாவிப்பதற்கு முன்வர வேண்டும். உங்களுடைய கையிலேதான் எதிர்காலமே உள்ளது உங்களுடைய திறமைகளையும் இளைமைகளையும் சரியான முறையில் பயன்படுத்த எடுத்திருக்கின்ற முயற்சிதான் இந்த நூலகம். இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான சாதனமாகதான் இதனை நான் கருகின்றேன்.

அதிலும் இளைஞர்கள் சர்வதேச ரீதியான தொடர்பையும் ஏற்படுத்தி கொள்வதுடன், உங்களுக்கு தேவையான உதவிகளை கேட்கும் போது கல்வி நடவடிக்கைகளுக்காக நான் எப்போது உறுதுணையாக இருப்பேன். அரசாங்கத்திருந்தும் மாகாண சபையிலிருந்து நிதிகளை பெற்று தருவேன் முடியாத பட்சத்தில் என்னுடைய சொந்த நிதியிலாவது இதற்கு உதவிகள் வழங்குவேன்.

மக்கள் விரும்பி வாக்களித்தால் மாத்திரமே நான் பதவியில் இருப்பேன் வாக்களிக்காமல் விட்டால் பதவியில் இருக்க மாட்டேன். ஏங்கு சென்றாவது எமது ஊரிக்காக அதுவும் தேவைகள் அதிகரித்த பிரதேசங்கள் விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தி வருகின்றேன்.

எங்களுக்குரிய வசதி வாய்ப்புக்களை முன்னர் மக்களின் வாக்குகளை பெற்றிருந்த அரசியல் வாதிகள் சரியான முறையில் செய்து தரவில்லை அதனால் தான் நாங்கள் இந்த நிலைக்கு சென்றுள்ளோம்.

எங்களுடைய தேவைகள் கூடுதலாக இருக்கின்றது அந்த தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு எங்கெல்லாம் உதவிகளை பெற்றுக் கொண்டு தர முடியுமோ அங்கு சென்று உங்களுடைய காலடிக்கு கொண்டு வருவேன். ஆப்படியில்லாவிட்டால் இந்த பதவில் இருப்பதில் அர்தமே இல்லை மற்றவருக்கு எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும். தற்போது மக்களின் அடிப்படை தேவையாக காணப்படும் நூலகத்தை திறப்பதற்கு எங்களுடன் மிக உறுதுனையாக இருந்தவர் பிரதேச சபை செயலாளர் சலீம் ஆவார். எந்த தடைகள் வந்தாலும் நூலக திறந்து மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருவேன் என்று கூறியதை இந்த நேரத்தில் ஞாபகமூட்ட கடமைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY