காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு: இது அரச நிதி அல்ல என்கின்றார் இராஜாங்க அமைச்சர்

0
222

(ஏ.எல்.டீன் பைரூஸ்)

DSC08613காத்தான்குடி தள வைத்திய சாலைக்கான ICU புனருத்தானம் மற்றும் நவர புதிய கட்டிடத்திற்க்கான இங்குரார்ப்பன நிகழ்வு இன்று (22) திங்கற்கிழமை காத்தான்குடி தள வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம் பெற்றது.

பிரதம அதிதியாக புணர்வாழ்வு மீழ்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு இன்றி ஹிறா பௌண்டேசன் ஊடாக சுமார் 10 கோடி ரூபாய் நிதியினை காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு ஒதுக்கீடு செய்வதன் ஊடாக வைத்தியசாலை மேலும் பாரிய அபிவிருத்தியை நோக்கி நகர்வதாக அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,

DSC08602நோர்வே அரசாங்கத்தின் பங்களிப்புடன் கட்டப்பட்ட இந்த வைத்தியசாலை இன்று சகலருக்கும் பல்வேறுபட்ட செவையினை வழங்கி வருவதனையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். அதே நேரத்தில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் முன்னேற்றத்தில் தற்போது கூடுதல் பங்களிப்பு செய்து வருகின்ற வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் அவர்களை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

கடந்த காலத்தில் அரசாங்கத்தின் ஊடாகவும், எமது ஹிறா பௌண்டேசன் ஊடாகவம் பல்வேறுபட்ட உதவிகளை நாங்கள் இந்த வைத்திய சாலைக்கு செய்துள்ளோம்.

இந்த வைத்தியசாலைக்கு தேவையான மிக நீண்ட காலம் பாவிக்கக் கூடிய அத்தனை நவீன உபகரணங்களையும் மதிப்பீட்டளவில் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் அரசாங்கத்தின் நிதியின்றி எமது ஹிறா பௌண்டேசன் ஊடாக செலவு செய்ய தீரமாணித்துள்ளோம்.

இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள ஒரு தனவந்தருடைய உதவியை பெற்றுக்கொள்ள உள்ளோம்.

ஓக்டொபர் மாதம் 19 திகதி நடுப்பகுதியில் இந்த ICU/ETU திறக்கப்பட வேண்டி உள்ளதால் இதற்கான ஒப்பந்தங்களை நாங்கள் அவசரமாக மேற்கொண்டுள்ளோம்.

மேலும் இவ்வைத்தியசாலை மூலம் எல்லா இன மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் இவ்வாறான வேளைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

மட்டக்களப்பு, அம்பாறை வைத்தியசாலைகளில் ICU பிரிவில் ஏற்படுகின்ற இட நெருக்கடிகளை தவிர்க்கும் வன்னமே மேற்படி பிரிவுகளை அவசரமாக திறக்கவுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தை விடவும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சுகாதார துறைக்கு கூடிய நிதிகளை ஒதுக்கி உள்ளனர்.

சுகாதார துறையினுடைய முன்னேற்றத்திலும் கூடிய கனவம் செலுத்தி வருகின்றனர்’ என தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களான கசீத், லக்மால் உட்பட வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகஸ்தர்கள், உலமாக்கள், பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவணங்கள் சம்மேளன உறுப்பினர்கள், காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளர், ஊடகவியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

DSC08605 DSC08607 DSC08615

LEAVE A REPLY