நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை

0
94

namalபங்கு கொள்வனவு நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (22) பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் நான்கில் சந்தேக நபர்களை விடுவித்து, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(Breaking) நாமல் ராஜபக்ஷ கைது!
கைதுசெய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில்

LEAVE A REPLY