மட்டக்களப்பு முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு

0
275

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

unnamedஇனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வொன்று மட்டக்களப்பில் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நல்லிணக்கத்திற்கான பொதுமக்களின் கருத்தறியும் செயலணி அறிவித்துள்ளது.

இதன்படி இந்த அமர்வு மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் புதன்கிழமை காலை 8:30 மணியிலிருந்து மாலை 4:30 மணிவரை இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 09ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதிவரை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கருத்தறியும் அமர்வுகள் இடம்பெற்றிருந்தன.

ஆயினும், இந்த அமர்வுகள் மாவட்டத்திலுள்ள 4 முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒன்றிலேனும் நடாத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அதிருப்தி தெரிவித்து மகஜர் ஒன்றை செயலணியிடம் கையளித்திருந்ததோடு முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவொன்றில் கருத்தறியும் அமர்வு நடாத்தப்படவேண்டும் என்றும் கோரியிருந்தது.

அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டே இந்த அமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக செயலணியின் மாவட்ட செயலாளர் ஏ. காண்டீபன் தெரிவித்தார். இந்த அமர்வுகள் தொடர்பான மேலதிக விவரங்களை செயலணிக்குழுவின் 0114232857 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கப் பொறிமுறைக்கு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் அக்கறை காட்டுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். சரித்திரபூர்வமான இந்தக் கருத்தறியும் பொறிமுறை வடிவமைப்பு ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்று செயலணி அறிவித்துள்ளது.

சட்டத்துறை நிபுணரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பலவற்றின் முன்னாள் ஆணையாளருமான மனோரி முத்தட்டுவேகம தலைமையிலான 11 பேர் கொண்ட செயலணி இந்த நல்லிணக்கப் பொறிமுறைக்கான பொதுமக்களின் கருத்தறியும் அமர்வுகளை நாடெங்கிலும் நடாத்தி வருகின்றது.

இந்த செயலணியில் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அதன் செயலாளராகக் கடமையாற்றுகின்ற அதேவேளை காமினி வியாங்கொட புயஅini ஏலையபெழனய விஷாகா தர்மதாஸ ஏளையமய னூயசஅயனயளயஇ சாந்தா அபிமன்னசிங்கம் ளூயவொய யுடிhiஅயnயௌiபொயஅஇ பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு Pசழக. ளுவைசயடநபய ஆயரயெபரசரஇ கே.டபிள்யூ ஜனரஞ்சன மு. று. துயயெசயதெயயெஇ பேராசிரியர் தயா சோமசுந்தரம் Pசழக. னுயலய ளுழஅயளரனெயசயஅஇ கலாநிதி பர்ஸானா ஹனீபா னுச. குயசணயயெ ர்யnகைகயஇ பேராசிரியர் கமீலா சமரசிங்ஹ.  மற்றும் மிராக் றஹீம் ஆசையம ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாகக் கடமையாற்றுகின்றனர். அதன் நாடளாவிய வலய மட்ட செயலணியில் 92 பேர் அங்கத்தவர்களாக உள்ளார்கள்.

LEAVE A REPLY