துருக்கியில் சிறுவனை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

0
133

Recep Tayyip Erdogan_CIதுருக்கியில் சிறுவனை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துருக்கிய ஜனாதிபதி Recep Tayyip Erdogan இதனைத் தெரிவித்துள்ளார். துருக்கியில் அண்மையில் திருமண விருந்துபசாரமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதலை 12 முதல் 14 வயது வரையிலான சிறுவன் ஒருவன் நடத்தியிருக்கின்றார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த சிறுவன் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குர்திஸ்கள் செறிந்து வாழும் புயணயைவெநி பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY