ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு: அமெரிக்கா முதலிடம்

0
95

201608220602394594_rio-olympics-2016-ends_SECVPFபிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரொ நகரில் கடந்த 3-ம் தேதி 31-வது ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது. 207 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது.

பதக்கப் பட்டியலில் அமெரிக்க முதலிடமும் (46 தங்கம்), பிரிட்டன் இரண்டாம் இடமும் (27 தங்கம்), சீனா மூன்றாம் இடமும் (26 தங்கம்) பெற்றது. இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் 67-வது இடத்தை பிடித்தது.

மரக்கானா மைதானத்தில் இன்று நடந்த கோலாகல நிகழ்ச்சியுடன் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு பெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY