சோமாலியாவில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

0
86

201608220404109477_More-than-10-dead-in-twin-blast-in-Somalia-town-Official_SECVPFகிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் மத்திய பகுதியில் உள்ள கல்கயோ நகரில், நேற்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

இந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 10-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். முதல் தாக்குதல் வெடிகுண்டு பொருட்களுடன் வந்த லாரி வெடித்து சிதறியது. பின்னர் மினி பேருந்து ஒன்று வெடித்தது.

உள்ளூர் அரசு தலைமை அலுவலகங்களை குறி வைத்து இந்த இரண்டு வெடிகுண்டு தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் சோமாலியாவில் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வரும் அல்-ஷபாப் போராளி குழு இந்த தாக்குதலை நடத்தி இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் கல்காயோ நகரில் உணவகம் ஒன்றில் அல்-ஷபாப் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் மூத்த அரசு அதிகாரி உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY