திருகோணமலையில் இன்ஜினை திருடியவர் கைது

0
130

(அப்துல்சலாம் யாசீம்-)

Arrested44திருகோணமலை-புடவைக்கட்டு பகுதியில் போட்டு இன்ஜின் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தேடுதல் நடாத்திய பொலிஸார் போட்டு இன்ஜினையும் சந்தேக நபரையும் நேற்றிரவு (21) கைது செய்துள்ளதாக குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் புடவைக்கட்டு-செந்தூர் பகுதியைச்சேர்ந்த எம்.கே.சுபைதீன் சித்தீக் (29 வயது) எனவும் அவரிடமிருந்து இரண்டு இலட்சம் பெறுமதியான போட்டு இன்ஜினும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்கரையோரத்தில் படகில் பொறுத்தப்பட்டிருந்த இன்ஜின் களவாடப்பட்டுள்ளதாக அதே இடத்தைச்சேர்ந்த ரபாய்தீன் வசீர் என்பவரினால் குச்சவௌி பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனையடுத்து இரகசியமாக தேடுதல் நடாத்திய போது இன்ஜினுடன் சந்தேக நபர் நேற்றிரவு மாட்டிக்கொண்டதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இனறைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY