இலங்கை அணியை 3 விக்கெட்களால் வென்றது அவுஸ்திரேலியா

0
160

18706steven-smith-600இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்களால் வெற்றியீட்டியது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்களைப் பெற்றது. தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஸ்டீவன் ஸ்மித் 58 ஓட்டங்களையும் ஆரோண் பின்ச் 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

LEAVE A REPLY