15 மணித்தியாலங்கள் தாமதமாக பயணத்தை ஆரம்பிக்க காரணமான விமானப் பணியாளர் பணிநீக்கம்

0
149

201607261651308924_Emirates-flight-makes-emergency-landing-at-Mumbai-airport_SECVPFவிமானமொன்று 15 மணித்தியாலங்கள் தாமதமாக பயணத்தை ஆரம்பிக்க காரணமான விமானப் பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் குறித்த பணியாளர் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அவர் மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய உடன் அமுலுக்குவரும் வகையில் அந்த பணியாளரை சேவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான UL554 எனும் விமானம், நேற்று முந்தினம் பிற்பகல் 3.20 மணிக்கு ப்ரங்பேர்ட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்கவிற்கான பயணத்தை ஆரம்பிக்கவிருந்தது.

இந்த விமானத்தில் கட்டுநாயக்க நோக்கி பயணிப்பதற்காக, 259 பயணிகள் தயாராகவிருந்தனர். எனினும், விமான பணியாளரொருவர் வருகை தராமையால் விமானம் புறப்படுவதில் 15 மணித்தியால தாமதம் ஏற்பட்டது.

தாமதம் தொடர்பில் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ள விமான நிறுவனம், ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்கிவிதிகளுக்கமைய தாமதத்திற்காக பயணிகளுக்கு நட்ட ஈட்டை பெற்றுக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதன்படி, பயணியொருவருக்கு 600 யூரோக்களை ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய, ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் பயணியொருவருக்கு செலுத்த வேண்டிய தொகை 96,960 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY