ஒருநாள் போட்டியில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தி மிட்செல் ஸ்டார்க் சாதனை

0
330

201608211747548812_100-ODI-wickets-for-Mitchell-Starc-Becomes-the-fastest-ever_SECVPFஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மிட்செல் ஸ்டார்க் 2-வது விக்கெட்டாக தனஞ்செயா டி சில்வாவை 2 ரன்னில் ஆட்டம் இழக்க வைத்தார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த போட்டிக்குப்பின் ஸ்டார்க் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். தற்போது இந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்ததால் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்தாக் 53 போட்டிகளில் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருநதார். நியூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட் 54 போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ 55 போட்டிகளிலும், தென்ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் 58 போட்டிகளிலும் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி 47 போட்டிகளில் 87 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இன்னும் 4 போட்டியில் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் ஸ்டார்க் சாதனையை முறியடிப்பார்.

LEAVE A REPLY