(Poem) புதிய வரைவிலக்கணங்கள் – I

0
40

(Mohamed Nizous)

தேசப் பற்று – இலங்கை அணி வெல்லும் போது இங்லிஸில் பாராட்டி ஸ்டேட்ஸ் போடல்

அபிவிருத்தி – ரோட்டுப் போடல் மற்றும் ரோட்டுத் திருத்தல்

போராட்டம் – போக்குவரத்தை மறித்தல் மற்றும் பொலிஸுக்கு ஊத்தைப் பேச்சால் ஏசுதல்.

வீரம் – சாரணை உயர்த்திக் கட்டல் மற்றும் சாராயம் அடித்தல்.

பள்ளி நிர்வாகம் – பெயிண்டை மாற்றுதல் மற்றும் Fan switchஐ பயன்படுத்துவதற்கான அதிகாரம்

புரட்சி – பேக் ஐடியில் வந்து உண்மைக்காகப் போராட ஒத்துழைப்புக் கோரல்

உரையாடல் – ஸ்மார்ட் போணைப் பார்த்துக் கொண்டே இடைக்கிடை உடைந்த சொற்களை உதிர்த்தல்.

சுற்றுலா – ஷெல்பீ எடுப்பதற்காக லொகேஷன் தேடி அலையும் நிகழ்வு

OPD – கங்காணிமாரின் செங்கோட்டை

குப்பை – காரில் போகும் போது காணாத இடத்தில் வீசும் சொந்த வீட்டுக் கழிவு.

தாஜுதீன் – தேவையான போது தொட்டுக் கொள்ள காரமான ஊறுகாய்.

சிகரட் – ஒரு புறம் நெருப்பு.மறு புறம் மடையன். இரண்டுக்கும் நடுவில் வெள்ளை உடுத்த விதவைப் பெண்.

கண்ணாடி – நாற்பதுகளின் பின்னாடி இருக்கும் முன்னாடி.

பைல்கவர் – மின்சாரம் இல்லா இரவில் வியர்வை விரட்டி

LEAVE A REPLY