காத்தான்குடியில் மனித பாவனைக்குதவாததும் காலவாதியானதுமான பண்டங்கள் மீட்பு: நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0
244

-விசேட நிருபர்-

unnamed (1)மட்டக்களப்பு காத்தான்குடியில் மனித பாவனைக்குதவாததும் காலவாதியானதுமான சுவீட்ஸ் வகைகள் இனிப்பு பண்டங்களை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று(21.8.2016) ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள மூன்று பழக்கடை மற்றும் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள ஒரு பல சரக்கு என்பன காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையை மேற் கொண்டபோதே இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காத்தான்குடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.நசிர்தீனின் ஆலோசனையில் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் கே.சத்தியானந்தன், மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ரி.மிதுன்ராஜ், எம்.கருணாகரன், ஜே.ஜெயனிகாந் ஆகியோர் இந்த சோதனை நடவடிக்கையை மேற் கொண்டனர்.

இதன் போது மனித பாவனைக்குதவாததும் காலவாதியானதும் லேபலிப்படாத வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுவீட்ஸ் வகைகள் இனிப்பு பண்டங்கள், குளிர்பானங்கள் ஜெலி வகைகள் என்பன கைப்பற்றப்பட்டன.

இதனை விற்பணை செய்த நான்கு வியாரிகளுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 23.8.2016 செவ்வாய்க்கிழமையன்று சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

unnamed (2)

unnamed (3)

LEAVE A REPLY