சரித்திரத்தில் என் பெயர் நிலைத்திருக்கும்: உசைன் போல்ட்

0
191

201608181120374448_Usain-Bolt-advances-to-finals-in-rio-olympic-200-meter_SECVPFஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள போல்ட், பீலே, முகமது அலி ஆகியோருக்கு இணையாக சரித்திரத்தில் தனது பெயரும் நிலைத்திருக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.

பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்தது குறித்து போல்ட் கூறியதாவது, ஓட்டப் பந்தய வாழ்க்கையை தொடங்கும்போது, இந்த அளவுக்கு வருவேன் என்று நினைக்கவே இல்லை. இந்த மகத்தான சாதனைகளை சாத்தியமாக்க உதவிய எனது சக வீரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தன் வாழ்வின் ஓட்டப்பந்தையத்திற்கான நீண்ட பயணம் முடிவுக்கு வருகிறது.

மகிழ்ச்சியாக அதே சமயம் நெகிழ்ச்சியாக உள்ளது. மகத்தான வீரர்களில் ஒருவராக இடம் பிடித்ததில் என்னை நினைத்து நானே பெருமைப்படுகிறேன்.

தான் ஒரு மகத்தான வீரன் என்றும் பீலே, முகமது அலி போல(அயம் தி கிரேட்டஸ்ட்) அவர்களுக்கு இணையாக சரித்திரத்தில் எனது பெயரும் நிலைத்திருக்கும் என நம்புவதாகவும், ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விடை பெறுவது தனக்கு வருத்தமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY