துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு, 94 பேர் காயம்

0
92

201608210916281634_Turkey-wedding-blast-30-dead-and-90-hurt-in-Gaziantep_SECVPFதுருக்கியில் திருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் உயிரிழந்தனர். 94 பேர் காயம் அடைந்து உள்ளனர்.

துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் குர்தீஷ் அமைப்பினரால் பயங்கரவாத தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இதுபோன்ற தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். துருக்கி தொடர்ந்து தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. இப்போது சிரியா எல்லைப் பகுதியில் உள்ள துருக்கியின் காஜியண்டெப் நகரத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நேற்று இரவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.

இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் 30 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சுமார் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக காஜியண்டெப் கவர்னர் அலி யார்லிகாயா தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்பிற்கான அரபு நாட்டு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் காஜியண்டெப் நகர எம்.பி தெரிவித்தார். கடந்த 18-ம் தேதி தென்கிழக்கு துருக்கியில் நடந்த தாக்குதலில் 4 போலீசார் மற்றும் பொதுமக்களில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு குர்திஷ் அமைப்பு மீது துருக்கி அரசு குற்றம் சாட்டியது.

LEAVE A REPLY