மிஸ்பா உல் ஹக் தொடர்ந்து விளையாட வேண்டும்: நசீர் ஹுசைன்

0
163

201608201940516798_Nasser-Hussain-wants-Misbah-to-continue-playing-for-as-long_SECVPFபாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். 42 வயதிலும் 18 வயது இளைஞன் போல் துள்ளிக்குதித்து விளையாடி வருகிறார். இவர் தலைமையிலான பாகிஸ்தான் இங்கிலாந்து சென்று நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும்போது பாகிஸ்தான் படுதோல்வி அடையும் என எல்லோரும் கூறினார்கள்.

ஆனால், லார்ட்ஸ் மற்றும் ஓவல் டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 2-2 என பாகிஸ்தான் சமநிலைப்படுத்தியது. முதல் டெஸ்டில் மிஸ்பா சதம் அடித்து அசத்தினார். பாகிஸ்தான் கடைசி போட்டியில் வெற்றி பெற்றதுடன், ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில், முதன்முறையாக முதல் இடத்தை நெருங்கி வருகிறது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தால் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடித்துவிடும். தான் விளையாடிய கடைசி போட்டியில் வெற்றி பெற்றதுடன், அணியையும் நம்பர் -1 இடத்திற்கு முன்னேற்றிவிட்டோம் என்ற சந்தோசத்தில் மிஸ்பா ஓய்வு அறிவிப்பு வெளியிடலாம்.

ஆனால், அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் விருப்பம் தெரிவித்துள்ளர்.

இதுகுறித்து ஹுசைன் கூறுகையில் ‘‘மிஸ்பா இன்னும் முடிந்த அளவிற்கு நீண்ட நாட்கள் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஓவல் டெஸ்ட் முடிந்த பின்னர் மிஸ்பாவிடம் பேசினேன். அப்போது நீங்கள் ஓய்வு முடிவை நீண்ட நாள் கழித்து அறிவிக்க வேண்டும் என்று சொன்னேன்.

கடைசி போட்டியில் வெற்றி, தரவரிசையில் நம்பர் ஒன் இடம் என உயர்ந்த இடத்தில் இருக்கும்போது, மிஸ்பா ஓய்வு பெற சரியான நேரமாக இருக்கலாம். ஆனால், அவர் நீண்ட காலம் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்க வேண்டும்.

அவருடைய கேப்டன்ஷிப் பதவி மிகவும் அபாரமாக இருக்கிறது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் நாட்டில் விளையாடாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஆட்கள் குறைவான மைதானத்தில் விளையாடுவது மிகவும் அபாரமானது.

பாகிஸ்தான் அணிக்கு என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதை தொடர்ந்து நீண்ட காலம் செய்ய வேண்டும். அவர்கள் இங்கிலாந்தில் தொடரைத்தான் கைப்பற்றவில்லை. ஆனால், ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளனர்’’ என்றார்.

LEAVE A REPLY