ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம்

0
96

201608210351045101_Strong-6-0-magnitude-quake-hits-northern-Japan_SECVPFஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள கடலோரப் பகுதிகளில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6 அலகாக பதிவு ஆகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

மியாகோ நகரில் இருந்து சுமார் 170 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவுமில்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதேபோல் மியாகோ பகுதியில் 7 மணி நேரத்திற்கு முன்பாக நேற்று 6 அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பாக 5.3 அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

LEAVE A REPLY