அல்-குர்ஆன் ஓதுவதை வானொலியில் கேட்டு மனனம் செய்த பார்வையற்ற சிறுவன்.

0
166

-எம்.ஐ.அப்துல் நஸார்-

unnamed (5)பிறப்பிலிருந்தே பார்வையற்ற ஹுஸைன் மொஹமட் தாஹிர் என்ற ஐந்து வயதுச் சிறுவன் நல்ல நிலையில் உடல்நிலை கொண்ட சிலரால் மாத்திமே முடியுமான ஒரு காரியத்தை செய்துள்ளான் – வானொலியில் அல்-குர்ஆன் ஓதப்படுவதைக் கேட்டு அதனை மனனம் செய்து கொண்டுள்ளான்.

ஜித்தாவில் வசிக்கும் பர்மாவை பூர்வீகமாகக் கொண்ட இந்தச் சிறுவனுக்கு அவனது தந்தை மொஹமட் தாஹிர் தனது மகனால் வெளிஉலகத்தை பார்க்க முடியாது என்பதனால் தொலைக்காட்சிக்குப் பதிலாக வானொலியொன்றை வாங்கிக் கொடுத்து அதில் குர்ஆன் 24ஃ7 என்ற அலைவரிசையினையும் வைத்துக் கொடுத்தார்.

அந்தச் சிறுவனும் தொடர்ச்சியாக அல்-குர்ஆன் பற்றியும் அதன் போதனைகளையும் அதில் ஒலிக்கவிடப்படுகின்ற கிராஅத்களையும் கேட்டுவந்தான்.

‘வாங்கிக் கொடுத்த வானொலி மூலம் அல்-குர்ஆனை மனனம் செய்யும் அளவிற்கு எனது மகன் நன்மையடைவான் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை’ என மொஹமட் தாஹிர் தெரிவித்தார்.

மூன்று வருடங்களாக தனது மகன் வானொலியில் கேட்டு அல்-குர்ஆனை மனனம் செய்கிறான் என்பதை மொஹமட் தாஹிர் அறிந்திருக்கவில்லை.

ஜித்தாவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்தபோது தன்னை இறைத் தூதரின் பள்ளிவாயலுக்கு அழைத்துச் செல்லுமாறு ஹுஸைன் கூறியிருக்கிறான்.

அப் பள்ளிவாயலுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால் சூறா அல்-பகராவின் சில வசனங்களை ஓதிக் காண்பிக்க வேண்டும் என தந்தை நிபந்தனையொன்றை முன்வைத்திருக்கிறார்.

நிபந்தனையை முன்வைத்த தந்தை அளவிலாத அளவு ஆச்சரியப்படும் வகையில் அந்தச் சிறுவன் சூறா அல்-பகராவினை முழுமையாக ஓதி முடித்திருக்கிறான்.

மொஹமட் தாஹிர் தனது மகன் அர்-குர்ஆன் முழுவதையும் மிகச் சரியாக மனனம் செய்திருக்கின்றானா என்பதை பரீட்சிப்பதற்காக பல ஆசிரியர்களிடமும் அல்குர்ஆனை மனனம் செய்துள்ள நிபுணர்களிடமும் அழைத்துச் சென்றுள்ளார்.
ஹுஸைன் வெற்றிபெற்றுள்ளதை அவர்கள் அனைவருமே உறுதிப்படுத்தினர். அல்குர்ஆனை ஓதுவதில் சில பாடங்களை அவன் கற்க வேண்டும் எனவும் ஆலோசனை கூறினர்.

பின்னர் மதீனாவில் இறைத் தூதரின் பள்ளிவாயலில் இயங்குகின்ற பார்வைக் குறைபாடுடையோர் அல்குர்ஆனை மனனம் செய்யும் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

‘அவன் பார்வையற்று ஒரு கையும் இயங்காத நிலையில் பிறந்ததனால் கடந்த பல ஆண்டுகளாக நான் அனுபவித்த துன்பங்களையும் கஷ்டங்களையும் இந்த அனுபவம் மறக்கச் செய்துள்ளதாக’ தாஹிர் தெரிவித்தார்.

LEAVE A REPLY