(Poem) கல்குடாவின் முத்து றியாழே…..

0
20

-மீராவோடை சுபைர்-

தம்பி..
தளைக்காத
கந்துகளும்
தளைக்கிறது
உன் வரவால்.

அசைக்க முடியா(த)
ஆல மரமிது
அசைத்துப் பார்த்தவர்கள்
களைத்துப் போனார்கள் உன் பலத்தால்.

நிழலுக்காய்
ஒதுங்கியவர்கள்
விருட்சத்தை
விலை பேசினார்கள்
முடியவில்லை உன் அறிவால்.

தங்க வந்த
காக்கைகள்
கொத்தி வீழ்த்த
பகல் கனவு கானுகின்றது.

கந்து கந்தாய்
வெட்டி வீழ்த்திப் பார்த்தார்கள்
வெட்ட,வெட்ட தளைக்கும் மரமிது
என்பது அவர்களுக்கு புரியவில்லையோ…….?

அற்ப,சொற்ப சலுகைக்காய்
காட்டிக் கொடுத்து
களங்கப் படுத்தி
வேரோடு பிடிங்கியெறிய
எண்ணியவர்கள்
தோற்றுப் போனதுதான் வரலாறு.

முஸ்லிம்களுக்கு
முகவரி கொடுத்தது
முஸ்லிம் காங்கிரஸ்
அழிக்க நினைத்தவன்
அழிந்து போனதுதான் சரித்திரம்.

தம்பி
தளராதே..!
தடைக்கற்களை
படிக்கற்களாய் மாற்று
எட்டுக்களை
எடுத்துவை-பல
தட்டுக்களை தாண்டுவாய்
திட்டுக்களை துஆக்களாய்
அல்லாஹ் மாற்றுவான்.

 

LEAVE A REPLY