மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் முயற்சியினால் வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி வழங்கி வைப்பு

0
179

unnamed (2)மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியின், மீராவோடை கிராமத்தில் அமைந்துள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட WP HN – 9614 இலக்கமுடைய அம்பியுலன்ஸ் வண்டிக்கு பதிலாக புதியதொரு வண்டியினை பெற்றுத்தருமாறு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினூடாக கிழக்கு மாகான முதலமைச்சரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்தனர்.

மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியசாலை அபிவிருத்தி குழு இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக பெரிதும் அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும் இயங்குகின்றமையும் இங்கு குறிப்பிடத்ததொரு விடயமாகும்.

அந்த வகையில் புதியதொரு அம்பியுலன்ஸ் வண்டி வழங்கப்படும் வரை தற்காலிகமாக ஒரு அம்பியுலன்ஸ் வண்டியொன்றினை வழங்குமாறு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேட்டுக்கொண்டதற்கினங்க மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலத்தினூடாக 2016.08.19ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு WP LW – 0424 இலக்கமுடைய அம்பியுலன்ஸ் வண்டியொன்று கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

இப்பிரதேச வைத்தியசாலைக்கு 2016.03.30 மற்றும் 2016.05.31 ஆகிய தினங்களில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் விஜயங்களை மேற்கொண்டிருந்ததோடு, அதன் பயனாக
இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக தன்னாலான பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, புதிய அம்பியுலன்ஸ் வண்டி கிடைக்கும்வரை தற்காலிகமாக ஒரு அம்பிலன்ஸ் வண்டி ஒன்றினை பெற்றுத்தந்தமைக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிற்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

LEAVE A REPLY