மாற்றுத்திறனாளிகளையும் அவர்களின் குடும்பங்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்திம்

0
219

(அப்துல்சலாம் யாசீம்)

20160819_163203_resizedமாற்றுத்திறனாளிகளையும் அவர்களின் குடும்பங்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டத்திம், முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரனையுடன் சமாதானம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பு(பெடோ)வும் இளம்தளிர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து குச்சவெளி பிரதேசத்துக்குட்பட்ட இறக்கக்கண்டியில் இடம் பெற்றது.

அல்ஹம்றா மகாவித்தியாலயத்தில் நேற்று (20) (பெடோ) நிறுவனத்தின் தலைவர் எம்.பி.நஜ்முதீன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு செனவிரத்ன முஸ்லிமெய்ட் திட்டமிடல் பணிப்பாளர் டி. அப்துல்சலீம் பிராந்திய இணைப்பாளர் எம் மஹ்ரூப் குச்சவெளி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆர். நிஜாம்தீன் மஸ்ஜித் நூர் பள்ளிவாசல் தலைவர் ரவுபிக் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளான பயனாளிகள் 11பேர் இந்நிகழ்வில் வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொண்டனர்..1500 குடும்பங்கள் செறிந்து வாழும் இறக்கக் கண்டியில் ஒரு நிரந்தர வைத்தியசாலையோ மருந்தகமோ கிடையாது இந்நிலையில் இக்கிராமத்தில் வாழும் ஜெ .அமீன்டீன் 30 வருட சித்த யுனானி விஷக்கடி ஆயுள்வேத வைத்தியத்தில் அனுபவமுள்ள மாற்றுத்திறனாளியான இவருடைய தொழில் சேவையை மேம்படுத்தி வழுவீட்டுவதக்காக முஸ்லீம் எயிட் அனுசரணை உதவிகள் வழங்கி மருந்தகம் மீளத்திறக்கப்பட்டுள்ளது .

ஜனாதிபதியின் விசமில்லா உணவு தயாரிக்கும் கொள்கைக்கமைவாக நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக கூட்டுடன் 120 நாட்டுக்கு கோழி மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜூகி தையல் மெஷின், மீன்பிடி வள்ளம், பாடசாலை மாணவர்களுக்கான சைக்கிள், விளையாட்டுப்பொருட்கள், தையல் தொழில் செய்பவருக்கான உபகரணம், இடியப்பம் செய்யும் உபகரணம், மூன்று சக்கர வண்டி போன்ற பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

20160819_163419_resized 20160819_163545_resized 20160819_163826(0)_resized 20160819_170527_resized 20160819_172104_resized

LEAVE A REPLY