கண்டி, தெல்தெனிய தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய தீ

0
108

தெல்தெனிய பகுதியிலுள்ள தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மாலை தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டு வந்த இரு பவுஸர்கள் மோதுண்டதில் குறித்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2016-08-20_at_20-29-57குறித்த எரிபொருள் நிலையத்திற்கு சொந்தமான தனியார் நிறுவன கட்டடத்தில் இதற்குமுன்னர் ஏற்பட்ட தீயினைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமைக்காக செலுத்த வேண்டியகட்டணம் இதுவரையில் செலுத்தப்படாமையால் தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு கண்டிமாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், கண்டி  நகர மேயரின் தலையீட்டினால் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவயிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY