நான்கு மாடி மாணவர் விடுதி மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையம் ஆகியன திறந்து வைக்கப்பட்டது

0
137

(அப்துல் சலாம் யாசீம்)

FB_IMG_1471614851365திருகோணமலை – கோணேசபுரியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் உயர்கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடி மாணவர் விடுதி மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிலையம் என்பன நேற்று முன்தினம் (19) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை வளாக முதல்வர் வி.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல- கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் ரி.ஜெயசிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாடு பூராவும் உள்ள பல்கலைக்கழகங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இவ்வாறான விடுதிகள் அமைக்கும் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட திருமலை வளாக விடுதியில் 100 அறைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் நால்வர் தங்கி படிப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1471614858785

LEAVE A REPLY