திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் விபத்து: தாயும் மகளும் படுகாயம்

0
214

(அப்துல் சலாம் யாசீம்)

accident0திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் முற்சக்கர வண்டியுடன் கார் மோதி முற்சக்கர வண்டி குடை சாய்ந்ததில் முற்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் இன்று (20) பிற்பகல் 3.30 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் சீனக்குடா-04ம் கட்டை பகுதியைச்சேர்ந்த ஜி.எச்.டபிள்யூ.விஜிதா (56 வயது) மற்றும் அவரது மகளான டபிள்யூ.லஹிறு மதுசானி (28 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கண்டி பிரதான வீதி குறுச சந்தியடியால் முற்சக்கர வண்டி ஆண்டாங்குளம் பகுதிக்குச் செல்வதற்கு திரும்பும் போது வேகமாக வந்த கார் முற்சக்கர வண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY