புலமைப் பரீட்சை செல்லங்களுக்கு

0
274

exam Scholarship(Mohamed Nizous)

நல் வாழ்த்து நாம் சொல்வோம்
நல்ல படி எழுது என்று
செல்லங்கள் பரீட்சையிலே
சிறப்பாக வெற்றி பெறும்

சரியாய் புரிவாய் கஷ்டமுள்ள கேள்விகளே இல்லை
தெளிவாய் புரிவாய்
தேர்வு கண்டு சோர்வு கொள்ளல் வேண்டாம்.

விடை தெரியா விட்டாலும்
வேறு பக்கம் பார்க்காதே
யாரும் உனைக் கேட்டாலும்
எதுவும் நீ கதைக்காதே
போராடு வினாவுடன் பேரெடு விடைகளால்
எழுதுவதொரு முறை
இது தரும் பல வரம்…

இதுதான் சவால்
1 2 3 4 சரியாய் அடி கோடு கோடு

பரீட்சைகள் முடிந்த பின்னால்
பார்க்காதே பத்திரத்தை
விரித்து விடு சிறகை நீ
விரும்பியதை விளையாடு.
யாருக்கு பாஸ் வரும்
யாருக்கு பெயில் வரும்
இறைவனின் கைகளில்
இருக்குது பெறு பேறு

அதனை நம்பு
1,2,3,4,5 தொழு தொழு

LEAVE A REPLY