முகம் பார்த்து பேசுங்க..! கூகுளின் அசத்தலான புதிய ஆப்

0
359

maxresdefault-2கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய Duo எனப்படும் புதிய video chatting app ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது அப்பிளின் FaceTime, மைக்ரோசாப்டின் Skype, பேஸ்புக்கின் Messenger app போன்றவை இது போன்று முகம் பார்த்து மற்றவர்களிடம் பேசிக் கொள்ளும் வசதியை அளிக்கிறது.

இந்நிலையில் இதே போன்ற வசதியை அளிக்க முடிவு செய்திருப்பதாக கடந்த மே மாதம் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படி Duo என்ற அப்பிளிகேஷனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மற்ற video chatting app போன்று இருந்தாலும் இதில் “Knock, knock” என்ற ஒரு புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது.

மற்ற அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மற்றும் தகவலை பெறும் நபர் என இருவரின் போன் நம்பர்கள் பதிவு செய்தால் மட்டுமே video chatting செய்ய முடியும்.

ஆனால் Duo அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மட்டும் தனது மொபைல் நம்பரை பதிவு செய்து கொண்டால் போதும்.

தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பதிவேற்றம் செய்து பயன்படுத்தக் கூடிய Duo அப்பிளிகேஷனின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Download the App:

Android : https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.tachyon&hl=en

iOS: https://itunes.apple.com/us/app/google-duo-simple-video-calling/id1096918571?mt=8

LEAVE A REPLY