ஆப்கானிஸ்தானில் 19 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ராணுவம் அதிரடி

0
99

201608182248579257_19-Taliban-militants-killed-in-Afghanistan_SECVPFஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் ராணுவம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் அமைந்துள்ள குந்துஷ் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இங்குள்ள சர்தாரா மற்றும் கான் அபாத் மாவட்டங்களில் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, அங்கே மறைந்திருந்த தலீபான்கள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே பலமணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இந்த சண்டையில் தலீபான் தளபதி குவாரி சபியுல்லா உள்பட 19 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த குவாரி சபியுல்லா, இந்த மாகாணத்தில் அரசு படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களிலும், பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் முக்கிய பங்காற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY