கதை சொல்லும் புகைப் படங்கள் (புகைப்பட தினம்)

0
141

(Mohamed Nizous)

taking-photo-hiking-sport-adventureபடத்தைத் பார்த்ததும்
இடத்தையும் கூறலாம்
நடத்தையும் கூறலாம்

புகைப் படத்தைப் பார்த்ததும்
பொல பொலன்னு நீர் வந்தால்
சரியாகச் சொல்லலாம்
சிரியாவின் படமென்று.

உள்ளத்தில் வீரமும்
உள்ளுக்குள் ஈரமும்
சொல்லாமல் தோன்றினால்
சொல் அது பலஸ்தீன் என.

மிக்க பக்தியுடன்
மக்கள் சேர்ந்திருந்தால்
டக்கென்று சொல்லலாம்
மக்காவின் படம் என்று

உகப்பான பனிமலையில்
சிகப்பாறு ஓடினால்
அகப் பார்வை சொல்லும்
அது காஷ்மீர் நிலம் என

சிதைந்த பொக்கிஷங்கள்
புதைந்த பொன் வயல்கள்
யாருக்கும் சொல்லலாம்
ஈராக் இது என்று.

மாட்டைக் காப்பதற்காய்
நாட்டைக் கொளுத்தும் படம்
போட்டு இருந்தால் அதை
காட்டு இந்தியா என.

சொந்த மண்ணிலேயே
குந்த இடமின்றி
சிந்தும் குருதி கண்டால்
இந்த மனம் கூறும் இது பர்மா.

துறவறத்தின் பெயராலே
கலவரத்தை தூண்டுகின்ற
நிலவரத்தின் படம் கண்டால்
உளம் சொல்லும் தீவின் பெயரை.

குடிசைக் கைத்தொழிலாய்
குண்டு தயாரிப்போர்
வரிசையாய் இருந்தால்
வாய் முனுமுனுக்கும் பாகிஸ்தான்

கலாச்சாரம் தொலைந்து போய்
விபச்சாரம் வீதி வந்து
அனாச்சாரம் அரங்கேறின்
அமெரிக்க போட்டோ என்று சொல்.

படத்தைத் பார்த்ததும்
இடத்தையும் கூறலாம்
நடத்தையும் கூறலாம்

LEAVE A REPLY