காத்தான்குடி கடற்கரை வீதி (Marine Drive) செப்பனிடும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

0
228

DSC_0035புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 2 கோடி 96 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கடற்கரை வீதி (Marine Drive) செப்பனிடும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

காத்தான்குடி கடற்கரை வீதி கலிமா சதுக்கத்தில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் நகர பிதா எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அங்குரார்ப்பண நிகழ்வில், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல மற்றும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம். பரீட் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர்களான றவூப் ஏ. மஜீத், சல்மா அமீர் ஹம்ஸா ஆகியோர் உட்பட ஊரின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரான இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தில் புனரமைப்பு செய்யப்படாத பல வீதிகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுத் தருமாறு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு அமைய அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு வீதிகள் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

DSC_0036 DSC_0037 DSC_0038 DSC_0048 DSC_0056 DSC_0084

LEAVE A REPLY