கல்முனை நகர அபிவிருத்தி விடயங்களை மேடைகளில் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்: அமைச்சர் நசீர்

0
214

(சப்னி அஹமட்)

Naseer MPC“கல்முனை நகர அபிவிருத்தி விடயங்களை மேடைகளில் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என கிழக்கு மாகாண சுகாதார, சதேச மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார். பாண்டிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அன்மையில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த ஆயுர்வேத வைத்தியசாலையை பாண்டிருப்புக்கு கொண்டு வருவதற்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன், ரீ.கலையரசன் ஆகியோர் பாரிய பங்களிப்பு செய்தார்கள் இவர்களை மக்கள் மறந்து விடக்கூடாது. கல்முனை நகர அபிவிருத்தி விடயங்களை இவ்வாறான மேடைகளில் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கெளரவமான மாகாண சபையில் பேசி தீர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று கிழக்கு மாகாண சபை இன, மத வேறுபாடுகள் இல்லாமல் சேவையாற்றிக் கொண்டிருக்கின்றது. நான் அமைச்சராக வந்ததன் பின்னர் திருக்கோவில், மத்திய முகாம், அன்னமலை போன்ற பிரதேசங்களுக்கு சமூக வேறுபாடு இல்லாமல் பல அபிவிருத்தி வேலைகளை செய்திருக்கிறேன்.

நகர அபிவிருத்தித்திட்டத்தில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து பேசி செயற்படுகிறார்கள். நாம் மக்களுக்கான சேவைகளை செய்வது எமது பொறுப்பாடும்.

மறுமையில் இவைகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இங்கு ஆயுர்வேத வைத்தியசாலை என்பது மக்களின் தேவையாகும். மனச்சாட்சியின் அடிப்படையில் மக்கள் மத்தியில் பேச வேண்டும். ஆகவே, இனிவரும்காலங்களில் மேடைகளில் பேசித்தான் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் எனபதை விட்டு விட்டும் மாகாண சபையிலையோ அல்லது அதற்கு பொருத்தமான இடத்திலையோ பேசிக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY