சிரிய யுத்தத்தின் கொடூரம் – உலகை உறைய வைத்த ஒளிப்படங்கள்

0
195

(எம்.ஐ.அப்துல் நஸார்)

apooசிரியாவில் நடைபெற்று வரும் யுத்தின் கோரத்தினை வெளிப்படுத்தும் புகைப்படங்களை சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டதைத் தொடந்து உலகம் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது.

காயப்பட்ட சிரியச் சிறுவன் ஒருவனின் ஒளிப்படமொன்று யுத்தத்தின் கொடூரத்தை துலாம்பரமாக காண்பிக்கின்றது.

அலெப்போவில் நடைபெற்ற வான் தாக்குதலில் காயமடைந்த ஐந்து வயதுடைய ஒம்ரன் தக்னீஷ் என்ற சிறுவன் இரத்தத்துடனும் புழுதியுடனும் நோயாளர் காவு வண்டியில் உள்ளே ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஒளிப்படம். அனைத்தையும் இழந்திருக்கும் அந்தச் சிறுவன் அழவில்லை.

தனது மடியில் கை வைத்தவாறு அமைதியாக இருக்கின்றான். தன்னை மீட்டெடுத்தவர்கள் தன்னையும் தன்னைப்போன்ற ஏனைய நான்கு சிறுவர்களையும் வைத்திசாலைக்கு எடுத்துச் செல்லும் வரை காத்திருக்கின்றான். அவனது பெற்றோர் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

அவன் அணிந்திருக்கும் ரீ-சேட்டில் பூனைநாய் கார்டூன் கதாபாத்திரம் இரத்தம் மற்றும் புழுதியினூடே தெரிகிறது.

இந்தப் ஒளிப்படம் கடந்த புதன்கிழமை (17) இரவு எடுக்கப்பட்டது. உடனே அது ஏராளமானோரால் பர்வையிட்டு பகிரப்பட்டது.

ஒம்ரானும் ஏனைய சிறுவர்களும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Sr Childகிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு அலெப்போவின் புறநகர்ப் பகுதிகள் அண்மைய ஆண்டுகளில் வான் தாக்குதல் மூலம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான அலெப்போவின் கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் ஒம்ரானின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிறிதொரு சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

வெள்ளை தலைக்கவசம் அணிந்தவர்களாக பரவலாக அறியப்பட்ட சிரிய சிவில் பாதுகாப்புக் குழுவின் தன்னார்வத் தொண்டர்கள் குறித்த ஐந்து வயதுச் சிறுவனையும் மேலும் மூன்று சிறுவர்களையும் மீட்டனர்.

எம் 10 வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவர்களும் ஒம்றானும் தற்போது சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்தாலும் அந்தச் சிறுவனின் பெற்றோர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது வைத்தியர்களுக்குத் தெரியாதுள்ளது.

375A4C6400000578-3746374-image-a-9_1471493002587இது தவிர, அலெப்போவில் ஐ.எஸ் ஆயுதப் படையினர் பதுங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படும் மன்பிஜ் ஆலை மீது அமெரிக்க வான் தாக்குதலைத் தொடர்ந்து புகையும் நெருப்புச் சுவாலையும் மேலெழும் ஒளிப்படமும் வெளியாகியுள்ளது.

அலெப்போவின் அல்-மைசர் சுற்றுவட்டாரத்திலுள்ள சேதமைந்த கட்டங்களின் ஒளிப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

புதன்கிழமை மாலை வெளியிடப்பட்ட இந்த ஒளிப்பங்கள் தொடர்பில் ஆயிரக்கணக்கானோர் தமது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். சிறுவனின் பரிதாப நிலை தொடர்பிலேயே கவலை வெளியிட்டுள்ளனர்.

‘எனது இதயம் உடைந்து விட்டது’ என டெனா என்பவரும், அதிர்ச்சியுடன் குழப்பமடைந்த சின்னஞ்சிறு சிரியச் சிறுவனின் வெறுமையான பார்வையினை காணும்போது அவர்களுக்கு நிகழும் சித்திரவதையினை நாம் எவ்வாறு நிறுத்தலாம் ? அது எப்போது முடிவடையும் என எண்ணத் தோன்றுகின்றது. என மற்றொருவரும் குறிப்பிட்டள்ளனர்.

எமது வெற்றிகரமான வாழ்வின் அளவீடு மற்றவர்களை நாம் அதற்கு எவ்வாறு அனுமதிக்கிறோம் என்பதிலேயே தங்கியுள்ளது என பிறிதொரு கருத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிறு என்பவர் ‘யுத்தத்தை நிறுத்து’ என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

bldgs 375A7F3800000578-3746374-image-a-14_1471496791793

LEAVE A REPLY