கொட்டாஞ்சேனையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்பு

0
419

CrimeTapeSmall

கொட்டாஞ்சேனை, புனித பெனடிக் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தை, மகன், மகள் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த மூவரும் விசமருந்திய நிலையில் இறந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த மூவரும் தற்கொலை செய்துள்ளதாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் தற்போது, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த விடயம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

#Thinakaran

LEAVE A REPLY