மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக காத்தான்குடி கபூர் வீதியின் வேலைகளை ஆரம்பம்

0
166

(எம்.ரீ. ஹைதர் அலி)

HRS_6558காத்தான்குடி டெலிகொம் வீதியில் அமைந்துள்ள கபூர் வீதியினைச் செப்பனிடுவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் இவ்வீதியை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் 2016.07.30ஆந்திகதி (சனிக்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டு மழைக்காலங்களில் இவ்வீதியில் நீர் தேங்கி நிற்கின்ற இடங்களை பார்வையிடுவதற்காக அன்றைய தினம் மழை பெய்த பிற்பாடு அவ்வீதிக்கு சென்றதோடு, அவ்வீதியில் வசிக்கும் மக்களிடமும் எவ்வாறு இதனை அமைக்க வேண்டுமென்ற மக்கள் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முன் வைத்த கோரிக்கைக்கமைவாக இவ்வீதியினை செப்பனிடுவதற்காக ரூபா 20 இலட்சம் மாகாண சபை நிதி நிதியொதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு வீதியினை கொன்றீட் வீதியாக புனரமைப்பு செய்வதற்காக 2016.08.03ஆந்திகதி (புதன்கிழமை) அடிக்கல்லும் நடப்பட்டது.

தற்போது புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புனரமைப்பு வேலைகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் 2016.08.17ஆந்திகதி (புதன்கிழமை) நேரடியாக பார்வையிட சென்றிருந்தார்.

HRS_6556இது சம்மந்தமாக கருத்து தெரிவிக்யிகையில் நமது கண்காணிப்பும் ஆலோசனைகளும் தொடர்ந்து இருந்தால் மாத்திரமே தரமான அபிவிருத்திகளை செய்யமுடியம் என தெரிவித்தார்.

இதன்போது குறித்த வீதியின் வேலைகளை அவதானித்த அவர் இவ்வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற பொருட்கள், கொங்றீட் கலவையினுடைய தரம் மற்றும் வேலையின் தரம் போன்ற சகல விடயங்களையும் அவதானித்ததுடன் அங்கு காணப்பட்ட சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை சிறிய கொங்றீட் கல்லின் தரம் குறைவு என சுட்டிக்காட்டி அதை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.

இதுவரை காலமும் இவ்வீதி செப்பனிடப்படாமல் காணப்பட்டதனால் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த இவ்வீதியில் வசிக்கும் மக்கள் அதிலும் குறிப்பாக பாடசாலைக்குச்செல்லும் மாணவர்கள் எனப்பலர் பிரயோசனமடையவுள்ளனர்.

HRS_6552 HRS_6581 HRS_6583

LEAVE A REPLY