பிரான்ஸில் ‘புர்கினி’ அணிந்த பத்து முஸ்லிம் பெண்கள் மீது நடவடிக்கை

0
603

பிரான்ஸ் கடற்கரையில் முழு உடலையும் மறைக்கும் ‘புர்கினி’ அணிந்த பத்து முஸ்லிம் பெண்கள் பிடிபட்டிருப்பதோடு அதில் நால்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை பிரான்ஸ் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

கான்ஸ் நகரில் கடந்த ஜுலை 28 ஆம் திகதி புர்கினி ஆடைக்கு தடைவிதிக்கும் சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் அவ்வாறான ஆடையுடன் வரும் பெண்கள் பொலிஸாரால் தடுக்கப்படுகின்றனர். இதில் ஆறு பெண்கள் எச்சரிக்கையுடன் வெளியேற்றப்பட்டதாகவும் நால்வருக்கு 38 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கான்ஸ் நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த தடைக்கு மதச்சார்பற்ற கொள்கையை உள்ளூர் நிர்வாகம் நியாயமாகக் கூறுகின்றபோதும் முஸ்லிம் தரப்பினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் புர்கினிஸுக்கு நாட்டின் பல பகுதிகளில் விதிக்கப்பட்ட தடைக்கு பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் ஆதரவு அளித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது பெண்களை இழிவுபடுத்துதல் போன்றது என்றும் பிரான்ஸ் நாட்டின் கொள்கைகளுடன் ஒத்துப்போகாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் ஏழு கடற்கரை நகரங்கள் புர்கினிஸிற்கு தடை விதித்துள்ளது.

அதே நேரத்தில், நாட்டை சமீப காலமாக அச்சுறுத்தும் ஜிஹாதிகளின் தாக்குதலுக்கு இது ஒரு தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#Thinakaran

LEAVE A REPLY