மனதை உருக வைக்கும் சிரியா சிறுவனின் புகைபடம்

0
177

201608181616168738_Little-boy-in-Aleppo-a-vivid-reminder-of-wars-horror_SECVPFசிரியாவில் 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரில் இதுவரை 2.7 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக உள்ளனர். பெண்கள், குழந்தைகள் என்று கூட பாராமல் உள்நாட்டு போரினால் மடிந்தவர்கள் ஏராளம்.

இந்நிலையில் அலெப்போ நகரில் விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவன் ரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது..

4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் உடல் முழுவதும் ரத்த வழிந்தோடிய நிலையில் அமர்ந்திருப்பது போன்று புகைப்படம் உள்ளது, இவனை சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் இந்த படம் சிரியாவில் நடக்கும் கொடூரங்களுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக உள்ளது.

LEAVE A REPLY