பேக்கரியில் வெடிப்பு சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு

0
102
201608181339272450_Three-killed-in-bakery-blast-in-Delhi_SECVPFபுதுடெல்லியில் பேக்கிரி ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்று தீயணைப்பு படை அதிகாரிகள் கூறிஉள்ளனர்.
புதுடெல்லியின் குரெஜி பகுதியில் பேக்கரி ஒன்றில் அதிகாலை 5.30 மணி அளவில் 20 ஊழியர்கள் வேலை செய்துக் கொண்டிருந்த போது வெடிப்பு நேரிட்டது. சமையல் அறையின் அருகே வேலையில் ஈடுபட்டு இருந்தவர்கள் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக நான்கு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியை தொடங்கினர். தீயணைப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிப்பு சம்பவத்திற்கான காரணத்தை அறிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY