ஐந்து வருடங்களாக சொத்துப் பிரகடனத்தை வெளியிடாத மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவருக்கு எதிராக வழக்கு

0
149

-எம்.ஐ.அப்துல் நஸார்-

mahinda1ஐந்து வருடங்களாக சொத்துப் பிரகடனத்தை வெளியிடாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழொன்று தனது இணைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவரும் இலங்கை இராணுவத்தின் மேஜர் தரத்திலுள்ளவருமான நெவில் வன்னியாராச்சி 2010 தொடக்கம் 2014 வரையான ஐந்து வருடங்கள் சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனத்தை வெளியிடாததன் காரணமாக இலஞ்ச ஆணைக்குழு இன்று (18) அவருக்கு எதிராக ஐந்து (05) வழக்குகளை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெவில் வன்னியாராச்சி செப்டம்பர் 28ஆந் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதவான் நீதிமன்ற நீதிபதி சந்தன கலன்சூரிய இன்று (18) நோட்டீஸ் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லங்காதீப

LEAVE A REPLY