மதவாச்சியில் நடு வீதியில் தலைகீழாக கவிழ்ந்த வாகனம் ; 19 பேர் காயம்

0
91

CqIn97gUEAEBIvUமதவாச்சி தள்ளாடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று (18) பகல் இடம்பெற்றுள்ளது. பட்டா ரக வாகனமொன்று கட்டுபாட்டை இழந்து வீதியில் தலைகீழாக கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 16 பெண்கள் 3 ஆண்கள் உட்பட 19 காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 வயது பிள்ளை மற்றும் 2/1 வயது குழந்தையும் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் அரம்பித்துள்ளனர்.

-VK-

LEAVE A REPLY