தெற்கு சூடான்: அதிபருக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறினார் முன்னாள் துணை அதிபர்

0
93

160814084015_south_2976703gதெற்கு சூடானின் தலைநகரமான ஜூபாவில் பல வாரங்களாக அரசு படையினருக்கும், முன்னாள் துணை அதிபரின் ஆதரவு படையினருக்கும் இடையே நடைபெற்ற பயங்கர மோதலை தொடர்ந்து முன்னாள் துணை அதிபர் ரெய்க் மச்சர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

துணை அதிபர் வெற்றிகரமாக அண்டை நாட்டிற்கு இடம்பெயர்ந்துவிட்டதாக மச்சரின் பேச்சாளர் ஜேம்ஸ் கட்டெக் டியாக் தெரிவித்துள்ளார். எந்த நாடு என்று அவர் தெரிவிக்கவில்லை.

தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர் கடந்த மாதம் ரெய்க் மச்சரை பதவி நீக்கம் செய்தார். தனக்கு பாதுகாப்பு வழங்க நடுநிலையான படையினரை அமைக்கும் வரை தான் ஜூபா திரும்பப்போவதில்லை என முன்னாள் துணை அதிபர் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY