காத்தான்குடியில் மின்சாரம் தாக்கியதில் றிஜான் எனும் சிறுவன் படுகாயம்

0
202

(விசேட நிருபர்)

Kattankudy boy burn by electricகாத்தான்குடி டெலிகொம் வீதியில் நேற்று (17) புதன் கிழமை இரவு மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

காத்தான்குடி டெலிகொம் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கடமைபுரியும் காத்தான்குடி அல் அமீன் வீதியைச் சேர்ந்த எம்.ஆர்.றிஜான்(15) எனும் சிறுவனே மின்சாரம் தாக்கியதில் காயமடைந்துள்ளார்.

மேற்படி இளைஞர் குறித்த வர்த்தக நிலையத்தின் மேல்மாடியில் சென்ற போது வர்த்தக நிலையத்திற்கு அருகில் வீதியோரமாக செல்லும் மின் இணைப்பிலிருந்து இவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இதில் காயமடைந்த மேற்படி இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Kattankudy boy burn by electric

LEAVE A REPLY