தம்பலகாமம் தி/அஷ் ஷம்ஸ் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை விஸ்தரிப்பதற்க்கான ஆரம்ப நிகழ்வு

0
144

(அப்துல்சலாம் யாசீம்)

unnamed (5)விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் H.M.M.ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 02 மில்லியன் ரூபா செலவில் தம்பலாகாமம் பிரதேசத்திற்கு உற்பட்ட தி/அஷ் ஷம்ஸ் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை விஸ்தரிப்பு செய்வதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு தி/அஷ் ஷம்ஸ் வித்தியாலயத்தின் அதிபர் M.எஹியா தலைமையில் இன்றைய தினம் (18) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மாகாணசபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர், முன்னால் தம்பலகாம பிரதேச சபை தவிசாளர் முஹமட் அலி , தம்பலகம பிரதேச முஸ்லீம் காங்கிரஸின் மத்திய குழுத் தலைவர் நசீர்கான், பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் ஏனைய பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.

LEAVE A REPLY