விமான விபத்தின் பின் 12 மணித்தியாலங்கள் மரத்தின் மீது தங்கியிருந்த விமானி

0
141

18633Baden-Wuerttembergஜேர்மனியின் ஸ்டட்கார்ட் நகருக்கு கிழக்கே 30 கிலோமீற்றர் தொலைவில் மரங்கள் அடர்ந்த பகுதியொன்றில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சிறிய விமானமொன்று வீழ்ந்தது.

இச்சம்பவத்தில் விமானி உயிர் தப்பினார். எனினும், விமானத்துடன் அவர் மரங்களுக்கிடையில் சிக்கிக்கொண்டார். தரையிலிருந்து சுமார் 30 மீற்றர் (98 அடி) உயரத்திலுள்ள மரத்தில் இவ்விமானி இருந்தார்.

இரவு நேரத்தில் அவரை கீழே இறக்கும் நடவடிக்கையில் ஈடுபடும்போது, அவர் தரையில் வீழ்ந்து விடக்கூடிய ஆபத்து இருந்தது. எனவே, விடியும் வரை மீட்பு நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சுமார் 12 மணித்தியாலங்கள் மரத்தின் மேலேயே தங்கியிருந்தார் இவ்விமானி.

LEAVE A REPLY