மற்றுமொரு புதிய இயங்குதளத்தினை வடிவமைக்கும் கூகுள்

0
125

google 01இணைய உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள கூகுள் நிறுவனம் தொழில்நுட்ப உலகில் அகலக்கால் பதித்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக அறிமுகம் செய்யப்பட்ட அன்ரோயிட் இயங்குதளம் இன்று வரை அதிகளவான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் அன்ரோயிட் இயங்குதளத்தின் இலகு தன்மையும், கவர்ச்சிகரமான பயனர் இடைமுகமும் தான்.

இப்படியிருக்கையில் Fuchsia எனும் மற்றுமொரு புதிய இயங்குதளத்தினை வடிவமைக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ் இயங்குதளமும் முற்றுமுழுதாக ஓப்பன் சோர்ஸ் இயங்குதளமாகவே வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப் புதிய பெயர் Pink Purple == Fuchsia (A New Operating System) என்ற அடிப்படையிலேயே உருவானதாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறெனினும் இவ் இயங்குதளம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் காலங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY