மலேசிய எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டது

0
149

kapalமலேசிய எண்ணெய்க் கப்பலொன்று 9 இலட்சம் லிட்டர் டீசலுடன் கடத்தப்பட்டு இந்தோனேஷிய கடற்பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்ட மலேசியக் கப்பலான வீயெர் ஹார்மனி, நான்கு இலட்சம் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான டீசல் எரிபொருளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள படாம் துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிக்கு மலேசிய எண்ணெய்க் கப்பல் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என மலேசியா சந்தேகம் வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தக் கப்பலைக் கடத்தியவர்களின் அடையாளம் எதுவும் தெரியவில்லை.

LEAVE A REPLY