சில்லி மீன் வறுவல் செய்வது எப்படி

0
127

201608171403090452_how-to-make-Chilli-Fish_SECVPFதேவையான பொருள்கள் :

வஞ்சிரம் வறுவல் ஸ்லைஸ் – 10
குடமிளகாய் – 1
வெங்காயம் – 1
சோயாசாஸ் – 1 டீஸ்பூன்
கிரீன்சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்
ரெட்சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – சிறிது
எண்ணெய் – தேவைக்கு
கார்ன் மாவு -1/2 டீஸ்பூன்
எலுமிச்சை – 1

செய்முறை :

* மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 1/2 மணி நேரம் ஊற விடவும்.

* தவாவில் சிறிது எண்ணெய் விட்டு மீனை போட்டு இரண்டு பக்கமும் சிவக்கும் வரை பொரித்துக்கொள்ளவும்.

* வெங்காயத்தை நான்கு துண்டுகளாக வெட்டி இதழ் இதழாக பிரிக்கவும்.

* குடமிளகாயை 1 இன்ச் நீளத்திற்கு சதுரமாக நறுக்கவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு குழிக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு சிவந்து விடாமல் வதக்கவும்.

* அடுத்து அதில் நறுக்கிய குட மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் அனைத்து சாஸ் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

* 1/4 டம்ளர் நீரில் கார்ன் மாவை கரைத்து கொதிக்கும் கலவையில் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.

* சர்விங் பவுலில் மீன்களை வைத்து, கிரேவியை தேவையான அளவு அதன் மேல் ஊற்றவும்.

* எலுமிச்சையை எட்டாக நறுக்கி பிளேட்டின் ஓரத்தில் வைத்து விரும்பினால் வெங்காயத்தை வட்டவடிவில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.

LEAVE A REPLY