வைத்தியசாலைகளின் குறைபாடுகளை ஒருபோதும் நிவர்த்தி செய்ய முடியாது: சுகாதார அமைச்சர் நசீர்

0
120

(சப்னி அஹமட்)

unnamed (1)வைத்தியசாலைகளின் குறைபாடுகளை ஒருபோதும் நிவர்த்தி செய்ய முடியாது. இந்த வைத்திய சேவைகள் உலகம் முடிவுரும்வரை இயங்கிக்கொண்டுதான் இரிக்கும் அதற்கான குறைபாடுகள் தொடர்ந்துகொண்டே செல்லுமே தவிற அதற்கென்று ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள மத்திய முகாம் மாவட்ட வைத்தியசாலையில் 4 மில்லியன் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேற்று விடுதி போன்ற கட்டிட திறப்பும் விழாவும், 4 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்படவுள்ள மருந்தக களஞ்சியத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நேற்று மாலை (16) கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடரந்தும் உரையாற்றுகையில்,

கல்முனை ஆதார வைத்தியசாலையிலும், கல்முனைக்குடி அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் மிக அதிகமாக சிகிச்சைகளை பெறுகின்றவர்களாக இங்குள்ள மக்கள் காணப்படுகின்றனர். சுமாராக 100 இக்கு 60 வீதமானவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெற்றுவருவதாக அறியமுடிகின்றது.

இப்பிரதேச மக்களின் தேவையை கருத்திற்கொண்டு மத்தியமுகாம் மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக மாற்றியமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளேன். அதற்காகவேண்டி அமைச்சரவையிலும் குறித்த வைத்தியசாலை தொர்பான ஆவனங்களையும் சமர்ப்பித்து மத்தியரசிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 10 வைத்தியசாலைகள் மிக அன்மையில் தரமுயர்தியுள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கையாக குறித்த மத்திய முகாம் மாவட்ட வைத்தியசாலையை மிக விரைவில் ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி, வைத்தியசாலைக்குத் தேவையான சகல உபகரணங்களையும், வைத்திய நிபுணர்களையும், வைத்தியர்களையும், உத்தியோகத்தர்களையும் வழங்கி இம்மக்களின் சுகாதார சேவைகளை மிகத்திறன்படுட முன்னெடுத்துச் செல்ல அதற்கான நடவடிக்கையினை எடுப்பேன் என்றார்.

LEAVE A REPLY